உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.7.22 லட்சம் குட்கா பறிமுதல் காரில் கடத்த முயன்ற மூவர் கைது

ரூ.7.22 லட்சம் குட்கா பறிமுதல் காரில் கடத்த முயன்ற மூவர் கைது

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கார்களில் கடத்த முயன்ற, 7.22 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், போலீஸ் எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை போலீசார் மறித்தனர். ஆனால் நிற்காமல் சென்ற கார், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, 'யு டர்ன்' எடுத்து மீண்டும் ஓசூர் பக்கமாக வந்தனர். அப்போது போலீசார், அக்காரை மடக்கினர். சோதனையில் காரில், 1.72 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 180 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி, மயிலாடுதுறைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த மயிலாடுதுறை அடுத்த தக்கன்குடியை சேர்ந்த பாபு, 33, சின்னமனுார் கோவில் குமார், 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அதேபோல உத்தனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம், ராயக்கோட்டை ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டதில், 5.5-0 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 531 கிலோ புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தியது தெரிந்தது. காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், மைசூரு, நஞ்சன்குடியை சேர்ந்த ராஜேஷ், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !