மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஓசூர்: பேரிகை வழியாக, 1.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திய மாணவன் உட்பட, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், மாஸ்தி சாலை ஜங்ஷன் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 1.92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 370 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. காரில் வந்த, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சஞ்சீவனுாரை சேர்ந்த டிரைவர் சிவா சிதம்பரம், 28, கனவாபுதுாரை சேர்ந்த, 17 வயதான தனியார் கல்லுாரி பி.காம்., முதலாமாண்டு மாணவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ராஜ் என்பவர் காரை கொடுத்து, பெங்களூரு சென்று குறிப்பிட்ட நபரிடம் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வாணியம்பாடிக்கு வரக்கூறியது தெரிந்தது. புகையிலை பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025