உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் வனக்கோட்டத்தில் விலங்குகள் நடமாட்டம் மக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு

ஓசூர் வனக்கோட்டத்தில் விலங்குகள் நடமாட்டம் மக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், வன விலங்குகள் நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பூனை, மயில், கரடி, கடமான், மான், சாம்பல் நிற அணில், எகிப்திய கழுகு உட்பட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அரியவகை மரங்கள் அதிகளவில் உள்ளன. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, மயில், பாம்பு, மான் போன்ற வன விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் அதிகளவில் முகாமிட்டுள்ளன. விவசாய நிலங்களுக்கு யானைகள் வரும்போது, மனித - விலங்கு மோதல் அவ்வப்போது நடக்கிறது. விவசாய பயிர்களும் சேதமாகி வருகின்றன.மேலும், வனப்பகுதியில் அவ்வப்போது வன உயிரினங்களை வேட்டையாடுதல், மரங்கள் வெட்டுதல், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தல் போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்கவும், வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால், மக்கள் எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்க வசதியாகவும், 1800 425 5135 என்ற இலவச எண்ணை வனத்துறை அறிவித்துள்ளது. இந்த எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓசூர் வனக்கோட்ட, வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை