மேலும் செய்திகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு
10-Jun-2025
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, புதுக்காடு மகா மாரியம்மன், மகா கணபதி கோவிலில் அரசு, வேம்பு திருமணம் செய்து, கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பாரம்பரிய சடங்கு விழா நேற்று நடந்தது. விழாவில், ஊத்தங்கரை பகுதியிலுள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூக பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்த-வுடன் அப்பெண்ணிற்கு அக்கோவிலில் புளிய மர கொம்பை வைத்து சடங்கு செய்கின்றனர். பூசாரிகள், மாப்பிள்ளை, பெண்-ணிற்கு, பாரம்பரிய முறைப்படி சடங்கு செய்கின்றனர்.இந்த பாரம்பரிய திருவிழாவில், அப்பகுதி மக்கள், திருமணம் செய்து கொடுத்த பெண்களை, இச்சடங்கை செய்யும் நிகழ்-விற்கு அழைத்து வந்து கொண்டாடுகின்றனர். நேற்று நடந்த பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
10-Jun-2025