உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர் பணியிடை பயிற்சி

அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியர் பணியிடை பயிற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் அறிவியல் ஆசிரியர் பணியிடை பயிற்சி நடந்தது.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரி இணைந்து, அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சியை நடத்தியது. கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கல்லுாரியில் நடந்த பயிற்சி முகாமில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 48 அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.கடந்த, 8ல் துவங்கிய பயிற்சி முகாம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவியல் துறைசார்ந்த பாட வல்லுனர்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு கல்லுாரி முதல்வர் முனைவர் அனுராதா சான்றிதழ்களை வழங்கினார். வேதியியல் துறை இணை பேராசிரியர் வெங்கடாசலம், இப்பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ