மரக்கன்று நடும் விழா
ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இந்-திய அரசியலமைப்பு சட்டத்தின், 75ம் ஆண்டு தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி ஹரி-ஹரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார், கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமலை ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். அரசு வக்கீல் ரவீந்திரநாத், வக்கீல்கள் மலர்வண்ணன் ராம்பிரகாஷ், ராம்பிரசாத், ஜெய்சங்கர், சரிதா, சாரதா உட்பட பலர் பங்கேற்றனர்.