உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் பஸ் இயக்க த.வெ.க., வலியுறுத்தல்

மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் பஸ் இயக்க த.வெ.க., வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, த.வெ.க., மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த மணவாரனப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மணவாரனப்பள்ளி, எப்ரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி விடும் நேரத்தில் மாலை, 4:30 மணிக்கு, மணவாரனப்பள்ளி வழியாக, கர்நாடக மாநில எல்லையை ஓட்டிய எப்ரி வரை, 20ம் எண் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது, இந்த பஸ் சேவை, 5:40 மணிக்கு, ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில மாணவ, மாணவியர் தினமும், 7 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.அதே பஸ், எப்ரியில் இருந்து திரும்ப வரும்போது, பண்ணப்பள்ளி, தம்மான்றப்பள்ளி, நாச்சிக்குப்பம், கடவரப்பள்ளி, காரக்குப்பம் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் காத்திருந்து மாலை, 6:40 மணிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, பள்ளி விடும் நேரத்தில், அரசு பஸ் வழக்கமாக இயக்கப்பட்டதை போல், சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை