உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரும்பு சீட்டுகள் திருடிய இருவர் கைது

இரும்பு சீட்டுகள் திருடிய இருவர் கைது

ஓசூர் : பாலக்கோடு தாலுகா, எர்ரணஹள்ளி வளைத்தோட்டத்தை சேர்ந்தவர் சேகர், 41, கட்டட கான்ட்ராக்டர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த உப்பாரப்பள்ளியில் தங்கியுள்ளார். பூனப்பள்ளியில் உள்ள ராகவேந்திரா லே அவுட்டில், புதிய வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் 25 இரும்பு சீட்டுகளை வைத்திருந்தார்.இதை கடந்த, 3ல், மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில், மத்திகிரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பெத்தாம்பட்டி நியூ காலனியை சேர்ந்த மணி, 47, நலபிராம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர், 42, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ