ரூ.1.50 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ஓசூர், ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டொயோட்டா காரை நிறுத்தி சோதனை செய்த போது, 137 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 54 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது.இதனால் காரில் வந்த இருவரை பிடித்து விசாரித்த போது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசிக்கும், ராஜஸ்தானை சேர்ந்த கார் டிரைவர் ராஜிந்தர், 21, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 25, என்பதும், பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானத்தை கடத்தி செல்வதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.