உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பைக்கு வைத்த தீ பரவி 2 கார்கள் எரிந்து சேதம்

குப்பைக்கு வைத்த தீ பரவி 2 கார்கள் எரிந்து சேதம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம், தக்காளி மார்க்கெட் உள்ளது. இதற்கு பின்னால், குமுதேப்பள்ளி காந்தி நகரிலுள்ள தனியார் மகேந்திரா கார் ஷோரூமிற்கு சொந்தமான, 100 க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நிறுத்தி வைக்கும் யார்டு உள்ளது. நேற்று மதியம், 12:30 மணிக்கு, தக்காளி மார்க்கெட்டில் இருந்த குப்பைக்கு யாரோ தீ வைத்துள்ளனர். கொழுந்து விட்டு எரிந்த தீ, காலியாக இருந்த தக்காளி பெட்டிகள் மீது பரவி, அருகேயிருந்த தனியார் கார் ஷோரூமின் யார்டு பகுதியிலும் பரவியது.இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தலா, 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 எக்ஸ்.யு.வி., ரக புதிய கார்களில் தீ பரவியது. கார்கள் கொளுந்து விட்டு எரிந்தன. ஓசூர் தீயணைப்புத் துறையினர், 2 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு கார்களின் ஒரு பகுதி முழுவதும் எரிந்து சேதமாகின. தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதால், யார்டில் நிறுத்தி வைத்திருந்த, 100 க்கும் மேற்பட்ட புதிய கார்கள் தீயில் இருந்து தப்பின. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை