உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் சாவு

வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இருவர் சாவு

கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி, வெங்கடராமன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 44, கூலித்தொழிலாளி. கடந்த, 26 மாலை, 6:45 மணியளவில், செல்லம்பட்டி அருகே நாகரசம்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஹீரோ ஸ்பிளண்டர் பைக் மோதியதில் பலியானார். பைக்கை ஓட்டி வந்த ஊத்தங்கரை அடுத்த இனாம் காட்டுபட்டியை சேர்ந்த பூபதி, 47 என்பவர் மீது, நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* காவேரிப்பட்டணம் அடுத்த கோடியூர்புதுாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 59. கால்நடை வியாபாரி. இவர், தன் நண்பரான மில்மேட்டை சேர்ந்த முருகன், 57, என்பவருடன் நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். பைக்கை கோவிந்தசாமி ஓட்டினார். காலை, 8:30 மணியளவில் எர்ரஹள்ளி கூட்ரோடு அருகே, கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் மோதியது. பைக்கிலிருந்து துாக்கி வீசப்பட்ட இருவரில், கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முருகன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், தொட்டபெளாவூர் சாலையை சேர்ந்த ராமசாமி, 60 என்பவர் மீது வழக்குப்பதிந்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை