உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

கெலமங்கலம் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரியை சேர்ந்தவர் கிரண்குமார், 35, கட்டட மேஸ்திரி; இவர் நேற்று முன்தினம் காலை, தனது மனைவி புஷ்பாவுடன், மல்லேபாளையத்தில் உள்ள தனியார் குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார். துணிகளை காய வைத்த போது, எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.பேரிகை அருகே தொட்டேகவுண்டேபள்ளி கிராமத்தில் உள்ள தேவராஜ் என்பவரது விவசாய கிணற்றில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. கும்பளம் வி.ஏ.ஓ., சக்திவேல் கொடுத்த புகார்படி, பேரிகை போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என, பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ