உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூதாட்டி உட்பட இருவர் மாயம்

மூதாட்டி உட்பட இருவர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த மைலேப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா மனைவி நஞ்சம்மா, 70. கடந்த, 2 மாலை, 6:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மகன் ரமேஷ், 40, கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.* தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கெண்டனஹள்ளியை சேர்ந்தவர் மாதப்பன் மனைவி கார்த்திகா, 43. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 12 மாலை, 4:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் சரோஜா, 65, சிப்காட் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே தோரிப்பள்ளியை சேர்ந்த டிரைவர் கோமடேஸ்வரர், 30, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திகாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி