உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்

அரசு நிலத்தில் மண் அள்ளிய இரு வாகனங்கள் பறிமுதல்

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு, எஸ்.முதுகானப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது.அங்கு சென்ற வருவாய்த்துறையினர், அரசு நிலத்தில் மண் அள்ளி கொண்டிருந்த கிட்டாச்சி வாகனம் மற்றும் டிப்பர் லாரியை பறி-முதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கி-ருந்த மண் அள்ளிய மர்ம நபர்கள் தப்பிச்சென்ற நிலையில், தாசில்தார் குணசிவா புகார் படி, லாரி மற்றும் கிட்டாச்சி வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ