உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விஜயை இயக்குவது பா.ஜ.,

விஜயை இயக்குவது பா.ஜ.,

கிருஷ்ணகிரி, ''விஜயை இயக்குவது, பா.ஜ.,தான்,'' என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார். கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மனிதநேய வழக்கறிஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் தான் எந்த தவறும் செய்யாமல், எல்லா தவறுகளும் தி.மு.க., அரசு செய்துள்ளது என்பது போல நடிகர் விஜய் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கரூருக்கு முன் பல ஊர்களில் அவரது பிரசாரம் நடந்தபோது, அங்கும் நெரிசல் ஏற்பட்டு, சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன. நடிகர் விஜய் இவ்வாறு பேச உள்நோக்கம் உள்ளது. கரூர் நிகழ்வுக்கு ஹேமாமாலினி தலைமையிலான ஒரு குழு வந்த பிறகுதான் இப்படி பேசியுள்ளார். இந்நிகழ்வின் மூலமாக விஜயை இயக்குவது பா.ஜ.,தான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ