உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் சசிகுமார் ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சசிகுமார், மாநில பொதுச் செயலாளர் குமார், மாநில பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ராம் சுரத்குமார் நன்றி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருந்து அஞ்செட்டி தாலுகா பிரித்து, 8 ஆண்டுகளுக்கு மேலா-கியும் அங்குள்ள, 15 கிராமங்களில், 8 கிராமங்களுக்கு தனியாக இணையதள சான்றிதழ் மற்றும் பட்டா மாற்றத்திற்கான இணைய தளம் பிரிக்காமல் உள்ளது. உடனே ஒவ்வொரு வி.ஏ.ஓ., அலுவ-லருக்கும், தனி லாகின் ஐடி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வா-கத்தை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி