உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் அவதி

குடிநீர் தட்டுப்பாடு கிராம மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி ஒன்றியம், திப்பிரெட்டிப்பட்டி ஊராட்சியில், 26 கிராமங்கள் உள்ளன. இங்கு வேப்பாடி ஆற்று குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், அவை குடிக்க இயலாது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குக்கல்மலை கிராமத்தில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குக்கல்மலை மக்கள் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். ஒரு சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்குகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் குடிநீர் வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை