உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை, வினாடிக்கு, 2,000 கன அடியாக குறைந்தது. காவிரி கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில், நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக சரிந்து வந்தது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ