உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3 மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து நேற்று வினாடிக்கு, 2,618 கன அடி நீர் திறப்பால், தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும், 3 மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் நேற்று காலை, 7:00 மணி வரை கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை என, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அத்துடன் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 560 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு, 3,513 கன அடியாக அதிகரித்தது.அணையின் மொத்த உயரமான, 52 அடியில் தற்போது நீர்மட்டம், 50.25 அடியாக உள்ளது. அதனால் அணை பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு, 2,618 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அணையின் கீழ் பகுதியிலுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்த படி செல்கிறது.இதையடுத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ