கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, ஜூ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 245 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 433 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து இடது, வலதுபுற கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 128 கன அடி என மொத்தம், 307 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.60 அடியாக நீர்மட்டம் இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, தேன்கனிக்கோட்டையில், 42 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், ஓசூர், 24.20, கெலவரப்பள்ளி, தளி தலா, 20, ராயக்கோட்டை, 17, கே.ஆர்.பி., அணை, 15.40, பாரூர், 9.20, கிருஷ்ணகிரி, 8, போச்சம்பள்ளி, 5.20, சூளகிரி, 5, சின்னாறு அணை, 4, என மொத்தம், 170 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.