உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த மாத துவக்கத்தில் இருந்து, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் நேற்று அதிகாலை, ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக கெலவரப்பள்ளியில், 38 மி.மீ., மழையும் மாவட்டத்தில் மொத்தம், 197.8 மி.மீ., மழையும் பதிவாகி இருந்தது. தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம், 643 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 703 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 643 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 49.90 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி