உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

கிருஷ்ணகிரி, ஜன. 3-கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், நாரலப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மகாராஜகடையில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.அதே போல், எம்.சி., பள்ளி பஞ்., பையப்பசெட்டிபுதுார் கிராமத்தில், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பல்நோக்கு கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, அ.தி.மு.க, துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி நேற்று திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, எம்.ஜி.ஆர், இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை