உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 குழந்தைகளுடன் பெண்கள் மாயம்

2 குழந்தைகளுடன் பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில், குழந்தைக-ளுடன், 2 இளம்பெண்கள் மாயமாகினர்.கிருஷ்ணகிரி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தீபிகா, 22. இவர், அதே பகுதியை சேர்ந்த தனசேகரன், 29, என்பவரை, 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை, குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற தீபிகா, மீண்டும் வீடு திரும்பவில்லை. தனசேகரன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். அதில், கிருஷ்ணகிரி தனியார் வங்கியில் பணிபுரியும் சிபிராஜ், 21, என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக கூறி-யுள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.பர்கூர் அடுத்த கரியகவுண்டனுாரை சேர்ந்தவர் ரம்யா, 27. இவர், சாதிநாயக்கன்பட்டியை சேர்ந்த அரசு என்பவரை கடந்த, 5 ஆண்-டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 23ல் தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்ற ரம்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து ரம்யாவின் தாய், பர்கூர் போலீசில் புகாரளித்தார். அதில், கல்லாவி அடுத்த சோலையூரை சேர்ந்த ஆனந்த், 20, என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாக கூறி-யுள்ளார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை