உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி; இருவர் மீது வழக்கு

கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி; இருவர் மீது வழக்கு

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நாகராஜ், 32. கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 24ம் தேதி, செம்பரசனப்பள்ளியில் உள்ள மஞ்சுநாத், 45, என்பவரது நிலத்தில், ராகி அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டிகானப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கதிரடிக்கும் இயந்திரம் மூலம் ராகியை அறுத்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி நாகராஜ் உயிரிழந்தார்.சூளகிரி போலீசார் மற்றும் அப்பகுதி வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தெரிவிக்காமல், அவரது சடலத்தை அடக்கம் செய்தனர். இதனால், செம்பரசனப்பள்ளி வி.ஏ.ஓ., திம்மராஜ் கொடுத்த புகார்படி, கதிரடிக்கும் இயந்திர டிரைவர் வெங்கடேஷ், நில உரிமையாளர் மஞ்சுநாத் மீது, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி