மயங்கி விழுந்து தொழிலாளி பலி
மயங்கி விழுந்துதொழிலாளி பலிஓசூர், நவ. 6-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ்தியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 60, கூலித்தொழிலாளி; இவருக்கு ரத்த அழுத்தம் இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:45 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பஸ்தி சாலையில் உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.