உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி அருகே தாயப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 38. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றார். பையனப்பள்ளி முனியப்பன் கோவில் எதிரே சென்ற போது, கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியை சேர்ந்த ஹூசைன், 59, என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி, பைக் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசாார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ