உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, அஞ்செட்டி வட்டங்களில் நாளை (21ம் தேதி) நடக்கவிருந்த கிராம உதவியாளர் காலி பணியிடத்திற்கான எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பிட, கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணியிடத்திற்கான எழுத்து தேர்வு நாளை (21ம் தேதி), போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி வட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.பாத்திமா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அஞ்செட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களை முன்னிட்டு, மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் எழுத்து தேர்வானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !