மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஹோட்டல்களுக்கு விருது
03-Aug-2025
கிருஷ்ணகிரி, சிறந்த உணவகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளை பின்பற்றி, நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கும் வருடாந்திர விற்பனை மற்றும் கொள்முதல், 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெரிய வகை உணவகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறை, ஒரு லட்சம் ரூபாயுடன் கூடிய விருதும், சிறு வணிகர்களுக்கு, 50,000 ரூபாயுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இம்மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செய்து, உணவகத்தை கள ஆய்வு செய்து, பரிந்துரைகளை உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு சமர்ப்பிப்பர். மாநில அளவிலான பரிசீலனைக்குழு, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் தேர்ந்தெடுத்து, விருதிற்கு பங்கேற்க அனுமதிக்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட நியமன அலுவலர், மாவட்ட நியமன அலுவலகம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, அறை எண்.107, இரண்டாம் தளம், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
03-Aug-2025