மேலும் செய்திகள்
மினி பஸ் போக்குவரத்து 4 வழித்தடத்தில் துவக்கம்
25-Jul-2025
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளியில், ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் தேவி, 40. நான்கு ரோடு சந்திப்பில், பழக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கீழ்மைலம்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 22, என்பவர் பழம் வாங்குவது போல் வந்து, தேவி கழுத்திலிருந்த, 7 பவுன் செயினை பறித்துள்ளார். செயின் அறுந்து, 2 பவுன் அளவிற்கு தினேஷ்குமார் கையில் கிடைத்த நிலையில், அதை எடுத்துக் கொண்டு தப்பியோடினார். தேவியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் தினேஷ்குமாரை துரத்தி பிடித்து, தர்ம அடி கொடுத்து, போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். புகார் படி, தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
25-Jul-2025