மொபைல்போன்திருடிய வாலிபர் கைது
ஓசூர், டிச. 14-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்த முனிராஜ், 36, ஓட்டல் நடத்தி வருகிறார்; நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு ஓட்டலுக்கு சென்ற வாலிபர் ஒருவர், அங்கிருந்த மொபைல்போனை திருடினார். இதை பார்த்த முனிராஜ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த வெல்டர் வேலை செய்யும் பெரியசாமி, 20, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.