உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அசாம் மாநில தொழிலாளி கொலை உடன் பணியாற்றிய வாலிபர் கைது

அசாம் மாநில தொழிலாளி கொலை உடன் பணியாற்றிய வாலிபர் கைது

அசாம் மாநில தொழிலாளி கொலைஉடன் பணியாற்றிய வாலிபர் கைதுஓசூர், அக். 12-பேரிகை அருகே நடந்த அசாம் மாநில தொழிலாளி கொலையில், உடன் பணியாற்றி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே புக்கசாகரத்தில் சம்பத்குமாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த, 14 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு குவாரிக்கு பின்னால் நிர்வாகம் சார்பில் தங்குவதற்கு அறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அறையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த அசோக் திமாரி, 31, என்பவர், 4 பேருடன் தங்கியிருந்தார். கடந்த, 9 இரவு உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் அறையில் துாங்கினர். ஆனால், அசோக் திமாரி மட்டும் அறைக்கு வெளியே துாங்கினார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு அசோக் திமாரி தலையின் பின்புறத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அருகில் ரத்த கரையுடன் சிமென்ட் ஹாலோ பிளாக் கல் கிடந்தது. பேரிகை போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், குவாரியில் சமையல் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த டிங்கு மலர், 28, சகோதரர்கள் சோட்டேலால், பிஷ்ணு ஆகியோர், அத்திமுகத்தில் உள்ள ஒரு குவாரியில் வேலை செய்து வருவதும், கடந்த, 2 மாதங்களுக்கு முன் அசோக் திமாரி அங்கு பணியாற்றிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.இதனால், சோட்டேலால் மற்றும் பிஷ்ணு ஆகியோரை கொன்று விடுவேன் என, அசோக் திமாரி பலரிடம் கூறியுள்ளார். அதன் பின் புக்கசாகரத்தில் உள்ள குவாரிக்கு அசோக் திமாரி வேலைக்கு வந்து விட்டார். இந்நிலையில், தனது தம்பிகளை அசோக் திமாரி கொன்று விடுவானோ என்ற அச்சத்தில் இருந்த டிங்குமலர், அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:45 மணிக்கு, அசோக் திமாரியுடன் அமர்ந்து மது அருந்திய டிங்குமலர், அவரிடம் வாக்கு வாதம் செய்து விட்டு அங்கிருந்து சென்றார். அசோக் திமாரி துாங்கிய பின் அங்கு வந்த டிங்குமலர், அவரது தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து, டிங்கு மலரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி