உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரயில் மோதி இளைஞர் பலி

ரயில் மோதி இளைஞர் பலி

ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள, மேல் சாமல்பட்டி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் அருள்வேடி, 24, கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. நேற்று அதிகாலை சாமல்பட்டி பகுதியில் உள்ள, ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது, அவ்வழியாக சென்ற ரயில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்பத்துார் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை