உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனித உரிமையை மீறியதாக எஸ்.பி.,க்கு எதிராக வழக்கு செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றம்

மனித உரிமையை மீறியதாக எஸ்.பி.,க்கு எதிராக வழக்கு செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றம்

மதுரை : திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலின் போது மனித உரிமையை மீறி நடந்து கொண்டதாக சாமி எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட முன்னாள் எஸ்.பி.,மனோகர் உட்பட நான்கு அதிகாரிகள் நேற்று தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராயினர்.சாமி எம்.எல்.ஏ., தாக்கல் செய்த மனு: திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மாண்டேலா நகர் அருகே என்னை வழிமறித்த எஸ்.பி., மனோகர், டி.எஸ்.பி., ஷாஜகான், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சத்யபிரபா என்னை தாக்கினர். தரக்குறைவாக பேசியதுடன், சட்ட விரோத காவலில் வைத்தனர். மனித உரிமைகளை மீறி நடந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரினார்.மனு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர், வக்கீல் ராமசாமியுடன் ஆஜரானார். எஸ்.பி., மனோகர் உட்பட நான்கு போலீசார் ஆஜராயினர்.மனுவில் குறிப்பிடப்பட்ட பிரிவுகள் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்க வேண்டியவை என்பதால், வழக்கை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிற்கு மாற்றுவதாக தலைமை மாஜிஸ்திரேட் தெரிவித்தார். அங்கு ஆக., 10ல் ஆஜராக போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி