உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி

மண் அள்ளும் இயந்திரம் மோதி கிளீனர் பலி

மேலூர் : டிரைவர் கவனக்குறைவால் பணியில் இருந்த கிளீனர் மீது இயந்திரம் மோதி இறந்தார். மேலூர் அருகில் உள்ள கிடாரிபட்டியில் இயந்திரத்தின் உதவியுடன் வயலில் மண் அள்ளும் பணி நடந்தது. கல்லம்பட்டியை சேர்ந்த கிளீனர் மலைச்சாமி மகன் சீமான்(20) பணிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கவனக் குறைவாக இயந்திரத்தை டிரைவர் வேலாயுதம் திருப்பிய போது அது மோதி அதே இடத்திலேயே சீமான் இறந்து போனார். அவ்விடத்தில் டிப்பர் லாரியில் மண்ணை ஏற்றிக் கொண்டிருந்த டிரைவர் வெள்ளைச்சாமி இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்தார். விபத்து ஏற்படுத்திய டிரைவர் வேலாயதத்தை கைது செய்து, மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி