உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹார்விபட்டியில் கல்வித் திருவிழா

ஹார்விபட்டியில் கல்வித் திருவிழா

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில், ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் சக்திவேல், வேலுராஜன், அண்ணாமலை, கதிரேசன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரங்கராஜ் வரவேற்றார். மதுரை தொழிலாளர் சங்க தலைவர் சுரேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாணவர்களுக்கு நோட்டுக்கள் வழங்கினர். நிர்வாகிகள் சிவசுந்தரம், ரங்கராஜ், முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் மோகன்தாஸ்காந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி