| ADDED : மார் 23, 2024 05:52 AM
பஸ் வசதி தேவைவாடிப்பட்டியில் இருந்து அலங்காநல்லுார், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல் வழியாக மாட்டுத்தாவணிக்கு பஸ் வசதி வேண்டும். போக்குவரத்து கழக அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். - சென்னகிருஷ்ணன், அலங்காநல்லுார்.ரோட்டை சீர் செய்ய வேண்டும்மதுரை சிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் இருந்து அனுமார் கோயில் செல்லும் வழியில் நடமாட முடியாதபடி ரோடு சிதிலமடைந்து கிடக்கிறது. டூவீலரில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆனந்த லட்சுமி, சிம்மக்கல்.அடிப்படை வசதி தேவைமதுரை விளாங்குடி மீனாட்சி நகர் பழைய பாண்டியன் தியேட்டர் அருகில் குடிநீர் குழாய் மட்டும் உள்ளது. தண்ணீர் வசதி, பாதாள சாக்கடை வசதி இல்லை. ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாண்டியராஜன், விளாங்குடி.வேகத்தடை தேவைமதுரை மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு, எல்.ஐ.சி., காலனி 2வது தெரு சந்திப்பில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.- அபுபக்கர், மீனாம்பாள்புரம்.கழிவுநீர் தேக்கம்மதுரை தத்தனேரி மேல வைத்தியநாதபுரம் ஏ.வி.எம்., பள்ளி பின்புறம் பாதாள சாக்கடை உடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி பெருகி நோய் தொற்று ஏற்படுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விஜய்தாஸ், தத்தனேரி.