ரேஷன் அரிசி கடத்திய2 பேர் கைது
மதுரை : மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய காலனி கண்ணன் 22, செல்வம் 26. இவர்கள் நகரின் பல பகுதிகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி ஓட்டல்களுக்கு விற்பனை செய்ய வாகனத்தில் கொண்டு சென்றனர். உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.