உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2.5 லட்சம் பறிமுதல்

ரூ.2.5 லட்சம் பறிமுதல்

மதுரை: மதுரை கிழக்கு சட்டசபை தொகுதி வரிச்சியூர் அருகே குன்னத்தூரில் நேற்று இரவு தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் அங்கு விரைந்தனர். அங்கு பணம் வினியோகித்த நபரிடம் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.அதேபகுதி வீடு ஒன்றில் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்த சிலர் அதிகாரிகளைக் கண்டதும் காரில் தப்பினர். அங்கிருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ