உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயில் போலீஸ் ஸ்டேஷனிற்கு 29 பேர் நியமனம்

குன்றத்து கோயில் போலீஸ் ஸ்டேஷனிற்கு 29 பேர் நியமனம்

திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கென உருவாக்கப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உட்பட 29 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போலீஸ் ஸ்டேஷன் இருப்பது போல் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீஸ் ஸ்டேஷன் வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதன் எதிரொலியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோயில் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக ராஜதுரையும், எஸ்.ஐ., உட்பட 4 பெண் போலீசார், ஒரு எஸ்.ஐ., மற்றும் 9 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 29 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி