உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., பொது செயலாளர் உட்பட 3 பேர் கைது

பா.ஜ., பொது செயலாளர் உட்பட 3 பேர் கைது

மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் பிரபு 50. பா.ஜ., மாவட்ட பார்வையாளராக இவர் உள்ளார்.நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் இவருக்கும் மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணனுக்கும் 54, முன்பகையால் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் முடிந்து இரவு 10:30 மணியளவில் கார்த்திக் பிரபுவை கொல்ல கரிமேடு சரவணப்பாண்டி 24, பாண்டியராஜன் 36, ஆகியோரை கிருஷ்ணன் அனுப்பியுள்ளார். இருவரும் ஆயுதங்களுடன் கார்த்திக் பிரபு வீட்டிற்கு சென்று மிரட்டினர். கார்த்திக் பிரபு புகாரின்பேரில் கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை