வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி
எழுமலை: எழுமலையைச் சேர்ந்தவர் குமரபாண்டி. மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் உரத்திற்காக மதுரையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கிடை அமைத்திருந்தார். நேற்று ஆட்டுக்கிடைக்குள் புகுந்த வெறிநாய் அடுத்தடுத்து கடித்ததில் 3 ஆடுகள் பலியாகின. 5 ஆடுகள் காயமடைந்தன.