உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் மறியல் செய்ய முயன்ற 450 பேர் கைது

ரயில் மறியல் செய்ய முயன்ற 450 பேர் கைது

மதுரை: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மதுரையில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிப்பிடவில்லை எனக்கூறி இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தின.இதையொட்டி மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு திரண்ட கட்சியினர் ரோட்டில் அமர்ந்து மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டனர். இந்திய கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் சம்பத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்ட செயலாளர் கணேசன்,இந்திய கம்யூ., சார்பில் முருகன், இந்திய கம்யூ., (எம்.எல்.,) சார்பில் மதிவாணன் பங்கேற்றனர்.அவர்கள் ரயில் மறியல் நடத்துவதற்காக ஸ்டேஷனுக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 200 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மறியலால் பெரியார்பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

திருமங்கலம்

திருமங்கலம் ஸ்டேட் பாங்க் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் முத்துவேல், ராஜேந்திரன், சந்தனம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 194 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

உசிலம்பட்டி

செல்லம்பட்டிபோஸ்ட் ஆபீஸ் முன்பாக மறியல் செய்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்லக்கண்ணு, முத்துப்பாண்டி, முருகன், ராமர், காசிமாயன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் விருமாண்டி, ஜீவானந்தம் உள்ளிட்ட 253 பேர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி