உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 613 கி.மீ.,க்கு ரோடு பணிகள் நிறைவு: மேயர் தகவல்

613 கி.மீ.,க்கு ரோடு பணிகள் நிறைவு: மேயர் தகவல்

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.228 கோடியில் 613 கி.மீ., ரோடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன என மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநகராட்சியில் 5 மண்டலங்களுக்கும் உட்பட்ட 100 வார்டுகளிலும் சீரான வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022 - 25 வரை டூரிப், 15வது மத்திய நிதி குழு, பொதுநிதி, நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு, நகர சாலைகள், சிறப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.334 கோடியில் 4053 ரோடு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் 2024 ஜூன் வரை 613 கி.மீ., வரை 3682 ரோடுகள் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.228 கோடி. மீதமுள்ள ரூ.106 கோடி மதிப்பிலான 371 ரோடு பணிகள் தற்போது நடக்கின்றன. விரைவில் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை