மேலும் செய்திகள்
நாளை மெகா லோக் அதாலத்
07-Mar-2025
சென்னை : மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இந்த ஆண்டுக்கான முதல் தேசிய லோக் அதாலத், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது.லோக் -அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு அமர்வுகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல், தமிழகம் முழுதும் உள்ள, மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், 431 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.இதில், 74,922 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 659.01 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. லோக்- அதாலத்தில், பல்வேறு அரசு துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் பங்கேற்றன.
07-Mar-2025