ஐந்தாவது ஜல்லிக்கட்டில் பறந்தது 993; பாய்ந்தது 550
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு தொகுதி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், ஆர்.டி.ஓ., ஷாலினி, தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.மேற்கு தொகுதியை சேர்ந்த 993 காளைகள், 550 வீரர்கள் களம் கண்டனர். வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள், அண்டா பரிசுகள் வழங்கப்பட்டன.இப்போட்டியில் காயமடைந்த 46 பேரில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். இந்த அரங்கில் மார்ச் 16ல் மேலுார் தொகுதிக்கும், மார்ச் 23, ஏப்.6 ல் தொடர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியின்போது ஒரு காளை வெற்றிக் கோட்டில் நின்றிருந்த போலீஸ் வேனின் முன்பக்கம் சென்று மோதியதில் அதன் 2 கால்களும் முறிந்தது.