உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊருணியை பாதுகாக்க வழக்கு

ஊருணியை பாதுகாக்க வழக்கு

மதுரை:ராமநாதபுரம் வெளிப்பட்டினம் நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ராமநாதபுரம் லட்சுமிபுரம் ஊருணி 600 ஆண்டுகளுக்கு முன் சேதுபதி மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு குடிநீராதாரமாக திகழ்கிறது. ஊருணி மாசுபட்டது. 2015 ல் துார்வாரப்பட்டது. ஒரு அறக்கட்டளை பராமரித்து மரங்களை நட்டது. நகராட்சி ஜூன் 30 ல் தீர்மானம் நிறைவேற்றி ஊருணியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தது. அதில் மக்கள் குளிக்கின்றனர். மீண்டும் ஊருணி மாசுபடுகிறது. அனுமதியின்றி படிக்கட்டுகள் அமைக்கப்படுகிறது. அதற்கும் மரங்களை வெட்டவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: எத்தகைய பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து நகராட்சி கமிஷனர் ஆக.,19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி