உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாத அரசு

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாத அரசு

திருப்பரங்குன்றம்: ''போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் தி.மு.க., ஆட்சி திணறுதிறது'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா குற்றம் சாட்டினார்.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.துவக்கி வைத்த மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறியதாவது: மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., அரசு, இளைஞர்கள் மீது கவனம் செலுத்தாத காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியாமலும் தி.மு.க., ஆட்சி திணறுகிறது. போதைப் பொருள்களால் மாணவர்கள், இளைஞர்கள் வாழ்க்கை திசை மாறிச் செல்கிறது.மதுரை மாநகராட்சியின் வெள்ளைக்கல் குப்பைக் கிடங்கில் பல நாட்களாக தீப்பற்றி எரிகிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் செயல்படவில்லை. ரோடுகள் அனைத்தும் மோசமாக உள்ளது. மதுரை மாநகராட்சி மோசமான சூழ்நிலையில் உள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் இடம் ஒதுக்கீடு செய்தும், கட்டடப் பணிகளை கிடப்பில் போட்டு வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ