உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

* சிதலமான தெருமதுரை சிம்மக்கல்லில் காமாட்சிபுரம் அக்ரஹாரம், அனுமன் கோயில் போகும் வழியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் நடக்க கடினமாக உள்ளது. மாநாகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆனந்தலட்சுமி, சிம்மக்கல்* கழிவுநீர் வெளியேற்றம்கோரிப்பாளையம் பள்ளிவாசல் மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்ததால் கழிவுநீர் வெளியேறுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்.- சோலைராஜ், சுப்புரமணியபுரம்* மோசமான ரோடுதிருநகர் விளாச்சேரி மெயின் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் நடந்து செல்வது கூட சிரமமாக உள்ளது. குப்பையை ரோட்டில் கொட்டியும், மழைநீர் தேங்கியும் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். ரோடை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.- பிரபு, திருநகர் * மின்விளக்கு வேண்டும்மதுரை செங்குன்றம் பெரக்கா நகரிலுள்ள கே.ஆர்.பி நகர் பகுதியில் மின்விளக்கு பழுதால் இரவில் மக்கள் நடமாட முடியாமல் தவிக்கின்றனர். மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- திவ்யா, செங்குன்றம்* வேகத்தடை வேண்டும்ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்துகளை தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும்.- பாரதீயன், பொன்னநகரம் மெயின் ரோடு* கழிவுநீர் வெளியேற்றம்மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் ப்ரீத்தம் தெருவில் பாதாள சாக்கடை வெளியேறி கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதன் அருகே மாநகராட்சி பூங்கா உள்ளதால் மக்கள் இவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். கழிவுநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஹரிஷ், துரைசாமி நகர்* மோசமான ரோடுகான்பாளையம் 3வது தெரு முனிச்சாலை ரோட்டில் ரோடு பிளந்து மோசமாக உள்ளது. குழிகள் இருப்பதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விரைவில் சீரமைக்க வேண்டும்.- பிரசன்னா, முனிச்சாலை ரோடு* கழிவுநீர் வெளியேற்றம்செல்லுார் திருவாப்புடையார் கோயில் தெருவில் சாக்கடை கழிவு வெளியேறுகிறது. பள்ளி செல்லும் வழி என்பதால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசி மக்கள் அவதியடைகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - லக்ஷிதா, செல்லுார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை