உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தந்தையை கொன்ற மாணவன்

தந்தையை கொன்ற மாணவன்

ஒத்தக்கடை: மதுரை உறங்கான்பட்டி செல்லப்பாண்டி 41. தனியார் கம்பெனி ஊழியர். மனைவி சத்யா, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மகன், 10ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.ஒரு பெண்ணுடன் செல்லப்பாண்டிக்கு தொடர்பு இருந்ததால் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். சத்யா குரண்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். செல்லப்பாண்டியனுக்கும், மூத்த மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்றுமுன்தினம் இரவு நெல்பேட்டை நண்பர்கள் இருவரை வரவழைத்து வீட்டின் மாடியில் தங்க வைத்தார்.நேற்று அதிகாலை துாங்கிக்கொண்டிருந்த செல்லப்பாண்டியை மூவரும் வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை டி.எஸ்.பி., சந்திரசேகர், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சுப்பையா, எஸ்.ஐ. ஆனந்த ஜோதி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 10, 2024 06:31

சின்னக் குழந்தைகளைக்கூட கொலைகாரர்கள் ஆக்கும் பயிற்சியை வழங்குவது தரம் கெட்ட சினிமாக்களும், டிவி சீரியல்களும் முதலில் அதற்கு தடை விதிக்க வேண்டும்


புதிய வீடியோ