உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காவு வாங்க காத்திருக்கும் சுவர்

காவு வாங்க காத்திருக்கும் சுவர்

மேலுார்: திருவாதவூர் ஊராட்சி புதுப்பட்டி, உலகுபிச்சம்பட்டி கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்கள், கால்நடைகள் மேய்ச்சல், கதிர் அறுவடை, குளிக்கும் தொட்டி உள்ளிட்ட தேவைகளுக்கு சுண்ணாம்பூர்- இலுப்பகுடி பெரியாற்றுக் கால்வாயை கடந்து செல்ல வேண்டும்.கால்வாயை கடக்க 40 வருடங்களுக்கு முன் துாங்கனேந்தல் கண்மாய் அருகே நீர்வளத் துறையினர் பாலம் கட்டி உடை கல்லால் ஆன தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். இச்சுவரின் கற்கள் பெயர்ந்து விட்டது. பாலத்தின் வழியாக செல்லும் விவசாயிகள் மக்கள், கால்நடைகள் அச்சத்துடனே செல்கின்றனர். தடுப்புச் சுவர் உடைந்து விழுந்து உயிர் பலி ஏற்படும் முன் நீர்வளத் துறையினர் தடுப்புச்சுவரை சரி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை